/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
77 அடியை எட்டிய பரப்பலாறு அணை
/
77 அடியை எட்டிய பரப்பலாறு அணை
ADDED : டிச 09, 2025 07:44 AM
ஒட்டன்சத்திரம்: 90 அடி கொண்ட ஒட்டன்சத்திரம் பரப்பலாறு அணை நீர்மட்டம் 77 அடியை எட்டியது.
ஒட்டன்சத்திரம் மலைப்பகுதியில் பரப்பலாறு அணை உள்ளது. அணையில் 90 அடி வரை நீரைத் தேக்கி வைக்க முடியும். பெருமாள்குளம், முத்து சமுத்திரம், முத்து பூபாள சமுத்திரம், காவேரியம்மாபட்டி பெரியகுளம், சடையன் குளம், ஜவ்வாதுபட்டி பெரியகுளம் உள்ளிட்ட சில குளங்கள் பரப்பலாறு அணை நீரையே நம்பி உள்ளன. மேலும் விருப்பாச்சி ஊராட்சி ஒட்டன்சத்திரம் நகராட்சியின் குடிநீர் தேவைக்கும் பயன்படுகிறது.
அணையின் நீர்மட்டம் முழு அளவை எட்டியவுடன் உபரி நீர் திறக்கப்படும்.
இதன்மூலம் மேற்கண்ட குளங்களுக்கு நீர்வரத்து கிடைக்கும். மேலும் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படும் போது குளங்களுக்கு நீர்வரத்தும் கிடைக்கும்.
நேற்று அணையின் நீர்மட்டம் 77. 51 அடியாக இருந்த நிலையில் அணைக்கு வினாடிக்கு 76 க.அடி நீர்வரத்தும் இருந்தது. குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 3 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணைப்பகுதியில் 5 மி.மீ., மழை பெய்து உள்ளது.

