சுய ஒழுக்கங்கங்கள் கற்றுக் கொடுக்கும் ஒரே அமைப்பு ஆர்.எஸ்.எஸ்.-,மட்டுமே: வி.எச்.பி., மாநில அமைப்பாளர் பாலாஜி பேச்சு
சுய ஒழுக்கங்கங்கள் கற்றுக் கொடுக்கும் ஒரே அமைப்பு ஆர்.எஸ்.எஸ்.-,மட்டுமே: வி.எச்.பி., மாநில அமைப்பாளர் பாலாஜி பேச்சு
UPDATED : நவ 01, 2026 09:11 PM
ADDED : நவ 01, 2026 09:06 PM
திண்டுக்கல்: ‘அமைப்பு ஒழுக்கமும், சுய ஒழுக்கமும் கற்றுக்கொடுக்கும் ஒரே அமைப்பு ஆர்.எஸ்.எஸ்.,.’ என, திண்டுக்கல்லில் நடந்த ஆர்.எஸ்.எஸ்., பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய விசுவ ஹிந்து பரிஷத் மாநில அமைப்பாளர் பாலாஜி பேசினார்.
திண்டுக்கல்லில் ஆர்.எஸ்.எஸ்., சார்பில், மணிக்கூண்டு அருகே பொதுக் கூட்டம் நடந்தது. இதில் விசுவ ஹிந்து பரிஷத் மாநில அமைப்பாளர் பாலாஜி பங்கேற்று பேசியதாவது: ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் முக்கிய நோக்கமே பாரத தேசம் உலகின் குருவாக வர வேண்டும் என்பதுதான். இதற்காக ஸ்வயம் சேவகர்கள் அனைவரும் உழைத்து வருகிறார்கள். கடந்த நுாறு ஆண்டுகளில் குடும்ப நலன், குடும்பங்களுக்கு இடையே ஒற்றுமை இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. குடும்பம்தான் நாட்டின் வேர் போன்றது. குடும்ப பாரம்பரியம் அழிந்தால் பாரத தேசத்தின் ஒற்றுமையும் அழிந்துவிடும். அதுபோல் சுற்றுச் சூழலைப் பாதுகாக்க வேண்டியது நமது அவசியங்களில் ஒன்று. பிளாஸ்டிக் ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் நுாற்றாண்டாகப் பணியாற்றி வருகிறோம். சமுதாயத்தில் எந்தவித ஏற்றத்தாழ்வுகளும் இன்றி அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற சமூக நல்லிணக்கத்தை விதைத்து வாழ வேண்டும். ஒவ்வொரு இந்திய குடிமகனும் தங்களுக்குரிய பணிகளைச் செம்மையாகச் செய்வதுடன், நாட்டின் சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்பட்டு, அவற்றை முறையாகப் பின்பற்றி நடக்க வேண்டும். ஆர்.எஸ்.எஸ்., அமைப்பைப் பற்றி முழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டுமானால், அதற்குள் வந்தால் மட்டுமே புரியும். ஸ்வயம் சேவகர்களை உருவாக்கி இந்த நாட்டைத் தலைமைக்குக் கொண்டு செல்வதற்கான அனைத்துப் பணிகளையும் ஆர்.எஸ்.எஸ்., செய்து வருகிறது. அமைப்பு ஒழுக்கமும், சுய ஒழுக்கமும் கற்றுக்கொடுக்கும் ஒரே அமைப்பு ஆர்.எஸ்.எஸ்.,தான்., என்றார்.
