/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கார் மோதி பள்ளி மாணவிகள் காயம்;- மறியல்
/
கார் மோதி பள்ளி மாணவிகள் காயம்;- மறியல்
ADDED : டிச 09, 2025 07:53 AM
நத்தம்: -நத்தம் அருகே கார் மோதி பள்ளி மாணவிகள் படுகாயம் அடைந்த நிலையில் பொதுமக்கள் மறியலால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
மதுரையை சேர்ந்தவர் ராமலிங்கம் 48. காரில் நத்தம் வழியாக மதுரை சென்று கொண்டிருந்தார். காரை டிரைவர் மணிவண்ணன் ஒட்டினார். நத்தம் பரளி மேம்பால பகுதியில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த கார் பாலத்தில் நடந்து சென்ற பள்ளி மாணவிகள் மீது மோதியது. அமிஷா 13, லசிக் ஷா 14, வெண்ணிலா 15, அனுஷ்கா 14, புது ஸ்ரீ 13, படுகாயமடைந்தனர். மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
பரளி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் விபத்து பகுதிகளில் சாலை தடுப்புகள், தெருவிளக்கு, சாலையில் தேங்கிய நீரை வெளியேற்ற வலியுறுத்தி பரளிபுதுார் சுங்கச்சாவடி பகுதியில் மறியலில் ஈடுபட்டனர். தாசில்தார் ஆறுமுகம், -இன்ஸ்பெக்டர் பொன் குணசேகரன் உள்ளிட்ட போலீசார் பேச்சு வார்த்தை பின் மறியல் கைவிடப்பட்டது.

