/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கிரிக்கெட்டில் கோப்பையை வென்ற தமிழக அணி
/
கிரிக்கெட்டில் கோப்பையை வென்ற தமிழக அணி
ADDED : டிச 02, 2025 07:20 AM

திண்டுக்கல்: இந்தியா கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.,) நடத்தும் 23 வயதுக்கு உட்பட்டவர்களுக்காக மாநிலங்களுக்கு இடையேயான ஒருநாள் போட்டிகளில் முதல் முறையாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளது.
இறுதிப்போட்டியில் உத்தரப் பிரதேச அணியை வீழ்த்தி தமிழ்நாடு அணி சி.ஓ.எல். சி. கே. நாயுடு கோப்பையை கைப்பற்றியது.
இந்த வெற்றியில் முக்கிய பங்காற்றியவர், திண்டுக்கல் மாவட்டம் நெட்டியப்பட்டி வீரர் பூபதி வைஷ்ண குமார். தமிழ்நாடு அணியின் கேப்டனாக இருந்த அவர் 9 போட்டிகளில் 489 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு பெரும் பங்களிப்பு செய்துள்ளார்
வெற்றி பெற்ற தமிழக அணியையும் கேப்டன் பூபதி வைஷ்ண குமாரையும் திண்டுக்கல் மாவட்ட சங்க தலைவர் ரகுராம், செயலாளர் அமர்நாத், உதவி தலைவர் வெங்கட்ராமன் , இணை செயலாளர், பயிற்சியாளர் மகேந்திர குமார் பாராட்டினர்.

