/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஒட்டன்சத்திரத்தில் விலை உயர்ந்த புடலங்காய்; கிலோ ரூ.18 ஆக அதிகரிப்பு

ADDED : டிச 03, 2025 12:35 AM

ஒட்டன்சத்திரம்: வரத்து குறைவால் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் புடலங்காய் விலை மூன்றே நாட்களில் கிலோ ரூ.5 லிருந்து ரூ.18 ஆக அதிகரித்துள்ளது.
ஒட்டன்சத்திரம், அம்பிளிக்கை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் புடலங்காய் அதிகம் விளைவிக்கப்படுகிறது. மார்க்கெட்டிற்கு வரத்து அதிகமாக இருந்தது. இதன்காரணமாக கிலோ புடலங்காய் ரூ.5 க்கு விற்பனையானது.
சமீபத்தில் பெய்த சாரல் மழையால் புடலங்காய் செடிகளில் இருந்த பூக்கள் உதிர்ந்தன. இதனால் அறுவடை குறைந்து மார்க்கெட்டிற்கு புடலங்காய் வரத்தும் பாதியாக குறைந்தது. இதனால் விலை உயர்ந்து கிலோ ரூ.18க்கு விற்பனையானது.
வியாபாரி ஒருவர் கூறுகையில், ''வரும் நாட்களில் வரத்து இன்னும் குறைய வாய்ப்புள்ளதால் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது,'' என்றார்.