/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
இடத்தை காலிசெய்ய அதிகாரியுடன் மிரட்டல் ;குறைதீர் கூட்டத்தில் மனுக்கள் வாயிலாக 210 பேர் முறையீடு
/
இடத்தை காலிசெய்ய அதிகாரியுடன் மிரட்டல் ;குறைதீர் கூட்டத்தில் மனுக்கள் வாயிலாக 210 பேர் முறையீடு
இடத்தை காலிசெய்ய அதிகாரியுடன் மிரட்டல் ;குறைதீர் கூட்டத்தில் மனுக்கள் வாயிலாக 210 பேர் முறையீடு
இடத்தை காலிசெய்ய அதிகாரியுடன் மிரட்டல் ;குறைதீர் கூட்டத்தில் மனுக்கள் வாயிலாக 210 பேர் முறையீடு
ADDED : டிச 09, 2025 07:50 AM
திண்டுக்கல்: போலீஸ் அவதுாறுபேச்சால் தற்கொலை முயற்சி , இடத்தை காலிசெய்ய அதிகாரியுடன் மிரட்டல் என்பன உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் மனுக்கள் வாயிலாக 210 பேர் முறையிட்டர்.
டி.ஆர்.ஓ., ஜெயபாரதி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது.
குஜிலியம்பாறையை சேர்ந்த தர்மர் கொடுத்த மனுவில், ஆர்.கோம்பை பகுதியில் நுாலகம் செயல்படாமல் உள்ளது. ஆனால் நுாலகம் செயல்படுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர். உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.
குஜிலியம்பாறை காச்சகாரம்பட்டி கிராம மக்கள் ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை உள்ளிட்ட குடியுரிமை ஆவணங்களுடன் வந்து அளித்த மனுவில், 10 ஆண்டுகளாக எங்கள் பகுதியை சேர்ந்த 50 க்கு மேற்பட்டோருக்கு இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மனு கொடுத்தோம். இதுவரை பட்டா கிடைக்கவில்லை. குடியிருக்கும் இடத்தை சிலர் காலி செய்யும்படி அதிகாரிகள் உதவியுடன் மிரட்டல் விடுக்கின்றனர். இதனால் எங்கள் வாழ்வாதாரத்துக்கு வழியில்லாமல் போய்விடும் நிலை உள்ளது. குடியுரிமை ஆவணங்களை கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைக்கிறோம் என குறிப்பிட்டுள்ளனர்.
ஒட்டன்சத்திரம் கொத்தயத்தை சேர்ந்த தனலட்சுமி கொடுத்த மனுவில் எனது மகன் மாரிமுத்துவை சத்திரப்பட்டி போலீசார் அவதூறாக பேசினர். இதனால் மனமுடைந்த மாரிமுத்து சானிபவுடரை குடித்து தற்கொலைக்கு முயன்றார். தற்போது அவர் ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

