/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தடுப்பு இல்லா ரோட்டோர கிணறால் விபத்துக்கு வாய்ப்பு
/
தடுப்பு இல்லா ரோட்டோர கிணறால் விபத்துக்கு வாய்ப்பு
தடுப்பு இல்லா ரோட்டோர கிணறால் விபத்துக்கு வாய்ப்பு
தடுப்பு இல்லா ரோட்டோர கிணறால் விபத்துக்கு வாய்ப்பு
ADDED : ஜன 11, 2025 05:26 AM

பயன்பாடில்லா தொட்டி : வத்தலக்குண்டு பஸ்ஸ்டாண்டில் குடிநீர் தண்ணீர் தொட்டி பயன்பாடின்றி உள்ளது. வெளியூருக்கு செல்லும் பயணிகள் பாதிக்கின்றனர். காட்சி பொருளாக உள்ள தண்ணீர் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.
--பிரசாத், வத்தலக்குண்டு.
அகற்றப்படாத குப்பை : திண்டுக்கல் பழநி ரோடு முருகபவனம் அருகே குப்பை கொட்டி பல நாட்களாக அகற்றப்படாமல் உள்ளதால் துர்நாற்றம் வீசுகிறது. பிளாஸ்டிக் கலந்த குப்பை குவிந்துள்ளதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது .குப்பை அகற்ற வேண்டும்.
-ஹரிஷ், திண்டுக்கல்.
அறுந்து தொங்கும் மின் ஒயர்கள் : வேடசந்துார் அருகே ஈ சித்துார் கிராமம் எம்.ஜி.ஆர். நகரில் ஆழ்துளை கிணறு பழுதடைந்து மின் மோட்டார் ஒயர்கள் அறுந்து தொங்குகிறது. இதை சரி செய்ய பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் கூறியும் எந்த பலனும் இல்லை.இதை சீரமைக்க வேண்டும்.
-தாமோதரன், சித்துார்.
சேதமான மின் கம்பம் : நிலக்கோட்டை அருகே எத்திலோடு ஊராட்சி கொங்கபட்டி பெருமாள் கோயில் அருகே மின்கம்பம் சேதமடைந்து உடைந்த நிலையில் உள்ளது. விபத்து அபாயம் உள்ளதால் அசம்பாவிதம் ஏற்படும் முன் கம்பத்தை மாற்ற வேண்டும்.
-சி.அய்யர்பாண்டி விளம்பட்டி.
ரோட்டில் தேங்கும் கழிவு நீர் : வேடசந்துார் மாரம்பாடியில் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டதால் கழிவுநீர் வெளியேறி ரோட்டில் தேங்கி நிற்கிறது.இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது .மேலும் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. சாக்கடையை துார்வார வேண்டும்.
-அ.சந்திரசேகர், மாரம்பாடி.
துார்வாரியும் நோ யூஸ் : திண்டுக்கல் திருவள்ளுவர் சாலை ரோட்டில் சாக்கடை துார்வாரி மண் குவித்து வைக்கப்பட்டுள்ளது. அகற்றாததால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு சிதறி மீண்டும் சாக்கடையை மூடுகிறது . இதை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜன், திண்டுக்கல்.
தடுப்பு இல்லா கிணறு : பாகாநத்தம் மலைப்பட்டியில் இருந்து கருங்கல்பட்டி செல்லும் வழியில் ரோட்டோர கிணறு தடுப்நு இல்லாமல் புதர் மண்டி விபத்து அபாயத்துடன் உள்ளது. விபரீதங்கள் ஏற்படும் முன்பு இங்கு பாதுகாப்பு தடுப்பு வேலி அமைக்க வேண்டும். --
-ஈஸ்வரன், எரியோடு.

