/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட இளைஞர்: எல்லை பிரச்னையால் தேடும் பணி மந்தம்; போலீசை கண்டித்து மறியல்

ADDED : டிச 09, 2025 07:52 AM

நிலக்கோட்டை: கூட்டாத்து அய்யம்பாளையம் வைகை ஆற்றில் குளிக்க சென்ற போது நீரில் அடித்து செல்லப்பட்டவரை தேடும் பணி, போலீஸ் எல்லை பிரச்னையால் மந்தமாக உள்ளதாக கூறி மக்கள் ரோடு மறியலில் ஈடுபட்டனர்.
வத்தலக்குண்டு அருகே பூசாரிபட்டியை சேர்ந்தவர் ராஜ்குமார் 32. திருமணம் ஆகி ஒரு ஆண்டு ஆகிறது. ராஜ்குமார் ,நண்பர்கள் நான்கு பேர் கூட்டாத்து அய்யம்பாளையம் வைகை ஆற்றில் குளித்தனர். ராஜ்குமாரை தண்ணீர் இழுத்து சென்றது. நிலக்கோட்டை தீயணைப்புத் துறையினர் ராஜ்குமாரை தேடினர். ராஜகுமாரின் உறவினர்கள் விருவீடு போலீசில் புகார் அளிக்க சென்றபோது சம்பவம் நடந்த இடம் வத்தலக்குண்டிற்கு உட்பட்டது என கூறி புகாரை வாங்க மறுத்தனர்.
வத்தலக்குண்டு போலீசில் புகார் அளித்த போது விருவீடுக்கு உட்பட்டது என கூறி புகார் வாங்க மறுத்தனர். ஆத்திரமடைந்த ராஜ்குமாரின் உறவினர்கள் வத்தலக்குண்டு - உசிலம்பட்டி ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். விருவீடு போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்டது என முடிவு செய்யப்பட்டு தேடும் பணி தொடர்கிறது. ஆற்றில் ராமநாதபுரம் பாசனத்திற்காக 650 கன அடி நீர் செல்கிறது. இதனை நிறுத்தினால் மட்டுமே தேட முடியும் என்பதால் போலீசாரின் வேண்டுகோள்படி நேற்று மாலை 4 :00 மணி முதல் வைகை அணையில் நீர் திறப்பு நிறுத்தப்பட்டது.தேடும் பணி நடக்கிறது.