/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
விளைச்சல் பாதிப்பால்மல்லிகை விலை உயர்வு
/
விளைச்சல் பாதிப்பால்மல்லிகை விலை உயர்வு
ADDED : ஜன 31, 2025 01:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விளைச்சல் பாதிப்பால்மல்லிகை விலை உயர்வு
புன்செய்புளியம்பட்டி,:தமிழகம் மற்றும் கேரளாவில் முகூர்த்த சீசன் தற்போது தொடங்கியுள்ளது. இதனால் மல்லிகை பூவின் தேவை அதிகரித்துள்ளது.
இதனால் விலையும் உயரத் தொடங்கியுள்ளது. புன்செய்புளியம்பட்டி மார்க்கெட்டில் நேற்று முன்தினம் கிலோ, 2,500 ரூபாய்க்கு விற்பனையான மல்லிகை, 2,900 ரூபாயாக நேற்று உயர்ந்தது. இதேபோல் கிலோ, ௧,500 ரூபாய்க்கு விற்ற முல்லை, 2,100 ரூபாய்க்கு விற்றது. 80 ரூபாய்க்கு விற்ற சம்பங்கி, 140 ரூபாய்க்கும் விற்பனையானது.

