/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
3 வழக்கு பதிவு செய்யப்பட்டதால் கந்துவட்டி ஆசாமி சரண்
/
3 வழக்கு பதிவு செய்யப்பட்டதால் கந்துவட்டி ஆசாமி சரண்
3 வழக்கு பதிவு செய்யப்பட்டதால் கந்துவட்டி ஆசாமி சரண்
3 வழக்கு பதிவு செய்யப்பட்டதால் கந்துவட்டி ஆசாமி சரண்
ADDED : ஜன 31, 2025 01:31 AM
காங்கேயம் :காங்கேயத்தை அடுத்த சிவன்மலை குருகத்தியை சேர்ந்தவர் சாமிநாதன், 55; கந்து வட்டி தொழில் செய்கிறார். இவரிடம் சிவன்மலையை சேர்ந்த செல்வராஜ், 32, எட்டு லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார்.
கடனுக்கு அசலும், வட்டியும் சேர்த்து, 35 லட்சம் ரூபாய் தரவேண்டும் என்று, செல்வராஜின் வீடு, நிலத்தை மிரட்டி எழுதி பெற்றுள்ளார். பணத்தை கொடுத்துவிட்டு பத்திரத்தை வாங்கி கொள்ளுங்கள் என்று, கொலை மிரட்டலும் விடுத்தாராம். இதுகுறித்து செல்வராஜ் போலீசில் புகாரளித்தார். இதன்படி காங்கேயம் டி.எஸ்.பி., மாயவன் தலைமையிலான போலீசார், சாமிநாதன் வீட்டில் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இதில், 73 கிரய பத்திர அசல் ஆவணங்கள், 10 கடனீட்டு பத்திரம், 6 செக் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர். இதை தொடர்ந்து சாமிநாதன் மீது மூன்று பிரிவுகளில், காங்கேயம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவான சாமிநாதனை டி.எஸ்.பி., மாயவன் தலைமையில் மூன்று தனிப்படையும் அமைக்கப்பட்டது.
இந்நிலையில் சாமிநாதன் தானாகவே முன்வந்து காங்கேயம் போலீஸ் ஸ்டேஷனில் நேற்று சரணடைந்தார். அவரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

