/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 1,000 பேருக்கு நியமன ஆணை
/
தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 1,000 பேருக்கு நியமன ஆணை
தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 1,000 பேருக்கு நியமன ஆணை
தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 1,000 பேருக்கு நியமன ஆணை
ADDED : டிச 07, 2025 05:08 AM
ஈரோடு: ஈரோட்டில் நடந்த தனியார் வேலைவாய்ப்பு முகாமில், 1,000 பேருக்கு நியமன ஆணை வழங்கப்பட்டது.
ஈரோட்டில், தனியார் வேலைவாய்ப்பு முகாம் கலெக்டர் கந்தசாமி தலைமையில் நடந்தது. மொத்தம், 229 நிறுவனங்கள் பங்கேற்று, எட்டாம் வகுப்பு முதல் பொறியியல் பட்டப்படிப்பு முடித்த பல்வேறு பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்தனர். இதற்கான நேர்காணலில், 6,000 பேர் பங்கேற்றனர்.
பணி நியமன ஆணை வழங்கி, வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி, நிருபர்களிடம் பேசியதாவது:
ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், மூன்றாவது வெள்ளிக்கிழமைகளில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.
நேற்று நடந்த முகாமில், 6,000 பேர் பங்கேற்றனர். 1,000 பேருக்கு வேலைவாய்ப்பு ஆணை வழங்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளி ஆண்கள், பெண்கள் 40 பேர் வரை ஆணை பெற்றுள்ளனர். இவ்வாறு பேசினார்.
நிகழ்வில் எம்.பி., அந்தியூர் செல்வராஜ், ஈரோடு கிழக்கு தி.மு.க., - எம்.எல்.ஏ., சந்திரகுமார், வேலைவாய்ப்பு துறை மண்டல இணை இயக்குநர் ஜோதிமணி உட்பட பலர் பங்கேற்றனர்.

