/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஸ்ரீவெங்கடேஸ்வரா கலை கல்லுாரியில் புத்தக தினவிழா
/
ஸ்ரீவெங்கடேஸ்வரா கலை கல்லுாரியில் புத்தக தினவிழா
ADDED : ஏப் 27, 2024 07:04 AM
ஈரோடு : கோபி, ஒத்தகுதிரை, ஸ்ரீவெங்கடேஸ்வரா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், உலக புத்தக தினத்தை முன்னிட்டு, கல்லுாரி ஆண்டு மலர் வெளியீட்டு விழா நடந்தது.
கல்லுாரி முதல்வர் மோகனசுந்தரம் வரவேற்றார். கல்லுாரி தலைவர் வெங்கடாசலம் தலைமை வகித்து பேசினார். கல்லுாரி இணை செயலாளர் கெட்டிமுத்து வாழ்த்துரை வழங்கினார். கல்லுாரி அறங்காவலர் கவியரசு முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக ரூட்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இயக்குனர் கவிதாசன், புத்தகம் என்னும் ஆயுதம் என்ற தலைப்பில் பேசினார்.கல்லுாரி செயலாளர் கருப்பண்ணன், ஆண்டு மலரின் துணுக்குகள் மற்றும் ஓவியங்கள் வரைந்த மாணவ-மாணவியரை பாராட்டி சான்றிதழ் வழங்கினார். நிறைவில் கல்லுாரி ஆங்கில உதவி பேராசிரியர் பூங்கொடி நன்றி கூறினார்.

