/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மருந்துகளின் விலை குறைப்பு நடவடிக்கை கோரி பிரசாரம்
/
மருந்துகளின் விலை குறைப்பு நடவடிக்கை கோரி பிரசாரம்
மருந்துகளின் விலை குறைப்பு நடவடிக்கை கோரி பிரசாரம்
மருந்துகளின் விலை குறைப்பு நடவடிக்கை கோரி பிரசாரம்
ADDED : ஜூலை 27, 2024 01:13 AM
ஈரோடு: மருந்துகளின் விலையை குறைக்க வலியுறுத்தி, மருந்து விற்-பனை பிரதிநிதிகள் நேற்று தெருமுனை பிரசாரம் மேற்கொண்-டனர்.
வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்க மாவட்ட தலைவர் சுரேஷ்-பாபு தலைமையில் தெருமுனை பிரசாரம் செய்தனர். மாவட்ட செயலாளர் சங்கரன், பொருளாளர் கோபிநாத், இணை செயலாளர் கவின்குமார், சி.ஐ.டி.யு., மாவட்ட துணை தலைவர் ரகுராமன் உட்-பட பலர் பேசினர்.மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் மீது, 12 சதவீத ஜி.எஸ்.டி., வரியை ரத்து செய்தாலே, பல மருந்துகளின் விலை குறையும். மருந்து உற்பத்தி நிறுவனங்கள் பெரும் லாபமீட்ட உதவும் வகையில், மருந்துகளின் விலையை சந்தை விலையில் இருந்து தீர்மானப்பதை கைவிட்டு, உற்பத்தி விலையில் இருந்து நிர்ண-யிக்க வலியுறுத்தினர்.