/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
எலும்பு குடோன் மின் இணைப்பு துண்டிப்பு மறியல் செய்த 500 பேர் மீது பாய்ந்த வழக்கு

ADDED : டிச 02, 2025 02:36 AM
அந்தியூர், அந்தியூரை அடுத்த காட்டூர் எல்லைமடை குட்டையில், எலும்பு குடோன் செயல்பட்டது. இங்கு மாட்டுக்கொம்பை அரவை செய்து, பட்டன் தயாரிக்கும் பணி நடந்தது. குடோனிலிருந்து எழும் துர்நாற்றத்தால் வசிக்க முடியவில்லை என்று கூறி, 500க்கும் மேற்பட்ட மக்கள், குடோனை மூட வலியுறுத்தி, செம்புளிச்சாம்பாளையம் அருகே முருகன்கிணறு பஸ் நிறுத்தத்தில் நேற்று முன்தினம் சாலை மறியலில் ஈடுபட்டனர். அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாசலம், வருவாய்த்துறையினர் சமாதானத்தை தொடர்ந்து, 6:30 மணி நேர மறியல் முடிவுக்கு வந்தது.
இதை தொடர்ந்து அந்தியூர் துணை மின்நிலைய உதவி செயற்பொறியாளர் அங்கப்பன் தலைமையிலான மின்வாரிய ஊழியர்கள், எலும்பு குடோனுக்கு செல்லும் மின் இணைப்பை நேற்று துண்டித்தனர். அப்போது எம்.எல்.ஏ., வெங்கடாசலம், ஊர்மக்கள் உடனிருந்தனர்.
மக்கள் மீது வழக்கு
எலும்பு குடோனை மூடக்கோரி, அந்தியூர்-பவானி ரோட்டில் நடந்த சாலை மறியலில், செம்புளிச்சாம்பாளையம், காட்டூர், வடக்காடு, கிழக்குக்காடு, பெரிய தாண்டாம்பாளையம், சின்ன தாண்டாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் ஈடுபட்டனர். இவர்கள் மீது அனுமதியின்றி சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டது, மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் பிரிவுகளில், அந்தியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.