/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சங்கமேஸ்வரர் கோவிலில் சித்திரைதேர்திருவிழா கொடியேற்றம்
/
சங்கமேஸ்வரர் கோவிலில் சித்திரைதேர்திருவிழா கொடியேற்றம்
சங்கமேஸ்வரர் கோவிலில் சித்திரைதேர்திருவிழா கொடியேற்றம்
சங்கமேஸ்வரர் கோவிலில் சித்திரைதேர்திருவிழா கொடியேற்றம்
ADDED : மே 03, 2025 01:08 AM
பவானி:பவானியில், கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவிலில், சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன்
துவங்கியது.
முன்னதாக சிவனடியார்கள், சங்கமேஸ்வரர் கோவிலுக்கு கொடியை கொண்டு வந்தனர். பின் கொடிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து, கோவில் வளாகத்தில் லிங்கம் உள்ள கொடியில் சிவ சிவ என்ற வாசகத்துடன் கொடியேற்றப்பட்டது.
நேற்று மாலை, பஞ்சமூர்த்தி புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. இன்று காலை, ஆதிகேசவ பெருமாள் சன்னதியில் கொடியேற்றமும், பின்னர் அபிஷேகம் ஆராதனை நடக்க உள்ளது.
வரும், 5ல், சிம்ம வாகனத்தில் புறப்பாடு, 6 ல், பஞ்சமூர்த்திகள், ஆதிகேசவ பெருமாள், 63 நாயன்மார்களுக்கு ஆராதனை, பின்னர் சுவாமி ரிஷப வாகனத்திலும், பெருமாள் கருட வாகனத்திலும் புறப்பாடு நடைபெறும், 7 ல், யானை வாகனத்தில் புறப்பாடு, 8ல், சிம்ம வாகனம், ஹனுமந்த வாகனத்தில் சுவாமி புறப்பாடு நிகழ்ச்சி நடக்க உள்ளது.