/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மத்திய அரசை கண்டித்து இன்று தாராபுரத்தில் தி.மு.க., ஆர்ப்பாட்டம்
/
மத்திய அரசை கண்டித்து இன்று தாராபுரத்தில் தி.மு.க., ஆர்ப்பாட்டம்
மத்திய அரசை கண்டித்து இன்று தாராபுரத்தில் தி.மு.க., ஆர்ப்பாட்டம்
மத்திய அரசை கண்டித்து இன்று தாராபுரத்தில் தி.மு.க., ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 27, 2024 01:14 AM
காங்கேயம்: திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் இல.பத்மநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய நாட்டின் பட்ஜெட் என்பது அனைத்து மாநிலங்களுக்கும் உரிய பங்கினை கொடுத்து, நாடு முழுவதும் சமச்சீரான வளர்ச்சியை உருவாக்கிட உதவ வேண்டும்.
ஆனால், இந்தாண்டு மத்திய அரசின் பட்ஜெட், ஒட்டுமொத்த இந்திய நாட்டின் அறிக்கையாக தெரியவில்லை. மாறாக தங்கள் ஆட்சியை காப்பாற்றிக்கொள்ள, சில மாநிலங்களுக்கு மட்டுமே நிதியை தாராளமாக அள்ளிக் கொடுத்தும். நாட்டின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகுத்து வரும் தமிழகம் போன்ற மாநிலங்கள் மீது வன்மத்தை கக்கிவிடும் வகையில் பட்ஜெட் உள்ளது. இதை கண்டித்து இன்று (27ம் தேதி) காலை, 10:00 மணிக்கு, தாராபுரத்தில் அண்ணா சிலை முன் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். இவ்-வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.