/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மருத்துவ சேவை ஆம்புலன்ஸ் இன்று ஆட்கள் தேர்வு
/
மருத்துவ சேவை ஆம்புலன்ஸ் இன்று ஆட்கள் தேர்வு
ADDED : ஜூலை 27, 2024 01:13 AM
ஈரோடு: நோய்வாய்ப்பட்ட விலங்குகளுக்கான மருத்துவ சேவையை, அதன் இருப்பிடத்துக்கு சென்று வழங்க விலங்குகளுக்கு என பிரத்யோக ஆம்புலன்ஸ் சேவையை தமிழக அரசு துவங்கி உள்ளது.
இதற்கான சேவை எண்: 1962 ஐ அறிவித்து, இதில் ஈடு-பட ஆட்கள் தேர்வு இன்று நடக்கிறது.ஓட்டுனர் பணிக்கு, 8 ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, 24 முதல், 35 வயதுக்கு உட்பட்ட, 162.5 செ.மீ., உயரமுள்ள, லைசென்ஸ் எடுத்து, 3 ஆண்டு நிறைவு பெற்றவர், பேட்ஜ் எடுத்து ஓராண்டு நிறைவு பெற்றவர் பங்கேற்கலாம். மாதம், 12,000 ரூபாய் சம்பளம் வழங்கப்படும்.ஆம்புலன்ஸ் உதவியாளர் பணிக்கு, பிளஸ் 2 படித்த, 19 முதல், 30 வயதுக்குட்பட்டவர்கள் பங்கேற்கலாம். மாதம், 13,000 ரூபாய் சம்பளம் வழங்கப்படும். ஈரோடு, அரசு மருத்துவமனை வளாகம், 108 ஆம்புலன்ஸ் அலுவலகத்தில் இன்று காலை, 9:30 மணி முதல் மதியம், 12:30 மணிக்குள் பங்கேற்க வேண்டும். அசல் கல்வி சான்று, ஓட்டுனர் உரிமம் கொண்டு செல்ல வேண்டும்.

