ADDED : ஜூலை 06, 2026 04:18 AM

அ நிறம் | அளவு
கோபி:கோபி பஸ் ஸ்டாண்டில், தண்ணீர் தொட்டி இருந்தும், தாகம் தணிக்க நீரின்றி பயணிகள் அவதியுறுகின்றனர்.
கோபி
பஸ் ஸ்டாண் டில், பஸ்கள் வெளியேறும் பகுதியில், பிளாஸ்டிக் தண்ணீர்
தொட்டி வைக்கப்பட்டுள்ளது. அதில் முறையாக தண்ணீர் நிரப்பாததால்,
பஸ் பயணிகள் தாகம் தணிக்க வழியின்றி அவதியுறுகின்றனர். அங்கு வரும்
பயணிகள், பைப் இணைப்பை திருகி தண்ணீர் வராததால் ஏமாற்றம் அடைகின்றனர்.
தற்போது மீண்டும் வெயில் தலைதுாக்கியுள்ள நிலையில், பஸ் ஸ்டாண்ட்
வரும் பயணிகள் அவதியுறுகின்றனர். எனவே நகராட்சி நிர்வாகம், தாகம்
தணிக்க வசதியாக தொட்டியில் நீர் நிரப்பி வைக்க நடவடிக்கை எடுக்க
வேண்டும்.
