sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சாலை விரிவாக்கத்தில் கட்டப்படும் சிறுபாலம் திசை மாறுவதாக மக்கள் புகார்; அதிகாரி பதில்

/

சாலை விரிவாக்கத்தில் கட்டப்படும் சிறுபாலம் திசை மாறுவதாக மக்கள் புகார்; அதிகாரி பதில்

சாலை விரிவாக்கத்தில் கட்டப்படும் சிறுபாலம் திசை மாறுவதாக மக்கள் புகார்; அதிகாரி பதில்

சாலை விரிவாக்கத்தில் கட்டப்படும் சிறுபாலம் திசை மாறுவதாக மக்கள் புகார்; அதிகாரி பதில்


ADDED : நவ 15, 2025 03:16 AM

Google News

ADDED : நவ 15, 2025 03:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புன்செய்புளியம்பட்டி:புன்செய்புளியம்பட்டி அருகே கீழ்முடுதுறையில் இருந்து மாதம்-பாளையம் செல்லும் சாலையில், மாநில நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை விரிவாக்கப்பணி நடக்கிறது. இதில் இரு இடங்-களில் சிறுபாலம் கட்vடுமான பணி நடந்து வருகிறது.

இதில் கீழ்முடுதுறை அருகே நீர்வழிப் பாதையில் சாலையின் குறுக்கே ஏற்கனவே உள்ள பழைய தரைப்பாலத்தின் ஒரு பகு-தியை இடித்து புதியதாக சிறுபாலம் கட்டுகின்றனர். இது தண்-ணீரின் போக்குக்கு குறுக்காக கட்டப்படுவதால், மழை காலங்-களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது, விவசாய நிலம் மற்றும் ஊருக்குள் நுழைய வாய்ப்புள்ளதாக, நெடுஞ்சாலைத்துறை அதி-காரிகளிடம் அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்பட

வில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் சவுந்தரராஜன் கூறியதாவது: கீழ்முடுதுறையில் கட்டப்படும் சிறு-பாலம் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள தரைப்பாலத்தின் அருகே ஒரு பகுதியை இடித்து அதன் அருகே கட்டப்படுகிறது.

ஏற்கனவே உள்ள சாலை ஐந்தரை மீட்டர் அகலத்தில் இருந்த நிலையில் சாலை விரிவாக்கம் செய்யப்படுவதால் மழைக்காலங்-களில் மழை நீர் எளிதாக செல்லும் வகையில் தற்போது சிறு-பாலம் கட்டப்பட்டு வருகிறது.

ஏற்கனவே உள்ள பழைய தரைப்பாலத்திலும் மழைநீர் வெளி-யேறும் வகையில் அமைக்கப்படவுள்ளது. இதனால் மக்கள் அச்-சப்பட தேவையில்லை.

இவ்வாறு கூறினார்.






      Dinamalar
      Follow us