ADDED : டிச 02, 2025 02:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் கந்தசாமி தலைமையில் துாய்மை பணியாளர்களுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் நடந்தது. பசுமை திட்டத்தில் வீடுகள், உயர் கல்விக்கான கடனுதவி, தொழில் புரிய மானியத்துடன் கடனுதவி, சம்பள உயர்வு, கறவை மாடுகள் வாங்க உதவி போன்ற கோரிக்கை அடங்கிய மனுக்களை துாய்மை பணியாளர் வழங்கினர்.
தெடார்புடைய துறைகளுக்கு அனுப்பி, நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்பட்டது. தாட்கோ மாவட்ட மேலாளர் முருகவேல், துணை மேலாளர் ஆனந்தமுருகன் ஆகியோர் பங்கேற்றனர்.

