/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தாளவாடி தொழிலதிபர் கடத்தலில் தனிப்படை போலீஸ் தீவிர தேடுதல்
/
தாளவாடி தொழிலதிபர் கடத்தலில் தனிப்படை போலீஸ் தீவிர தேடுதல்
தாளவாடி தொழிலதிபர் கடத்தலில் தனிப்படை போலீஸ் தீவிர தேடுதல்
தாளவாடி தொழிலதிபர் கடத்தலில் தனிப்படை போலீஸ் தீவிர தேடுதல்
ADDED : டிச 07, 2025 09:12 AM
சத்தியமங்கலம்: - தாளவாடியை சேர்ந்த தொழிலதிபர் கிஷோர்குமார், 36; ஜவுளிக்கடை மற்றும் ஹார்டுவேர் கடை, பல்வேறு தொழில் செய்கிறார். கடந்த, 3ம் தேதி இரவு நடைபயிற்சி சென்றவரை, காரில் வந்த மர்ம கும்பல் கடத்தி சென்றது.
இதுகுறித்த புகாரின்படி சத்தி டி.எஸ்.பி., சண்முகசுந்தரம், தாளவாடி போலீசார் தேடுதலில் ஈடுபட்டனர். மறுநாள் காலை கும்பாரண்டி என்ற இடத்தில், காரில் இறக்கிவிட்டு கடத்தல் கும்பல் தப்பியுள்ளது.
கடத்திய கும்பல் முகத்தை துணியால் மூடி, இரவும் முழுவதும் காரிலேயே வைத்து தாக்கியுள்ளனர். இதனால் கடத்தியது யார்? எதற்காக கடத்தினார்கள்? என்ற முழு விபரம்
தெரியவில்லை. சம்பவம் தொடர்பாக போலீசார் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. 'சிசிடிவி' காட்சிகளின் அடிப்படையில் தொழிலதிபரை கடத்திய கும்பலை, போலீசார் தேடி வருகின்றனர்.