ADDED : அக் 31, 2026 06:43 AM
அ நிறம் | அளவு
ஈரோடு;ஈரோடு ரோட்டரி சங்கம், அமிர்தம் பவுண்டேஷன் சார்பில், 2021 முதல் தாய்ப்பால் தானம் குறித்து விழிப்புணர்வு செய்யப்படுகிறது.
கோவை, சேலம், நாமக்கல் அரசு மருத்துவமனைகளில் செயல்படும் தாய்ப்பால் வங்கிகளுக்கு, ஈரோடு மாவட்டத்தில் இருந்து தானமாக தாய்ப்பால் வழங்கும் தாய்மார்களிடம் தாய்ப்பாலை வாங்கி, வழங்கி வருகின்றனர். அவ்வாறு மாவட்டத்தில் இருந்து, 1,827 லிட்டர் தானமாக வழங்கப்பட்டுள்ளது.
இப்பால் குறை மாதத்தில் பிறந்த குழந்தைகள், குறைந்த எடை கொண்ட குழந்தைகள், தாயின் உடல் நலக்குறைவு போன்ற காரணத்தால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், 2024 ஜூலை, 31 முதல் தாய்ப்பால் வங்கி செயல்படுகிறது. இத்தகவலை கலெக்டர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.
