/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வாட்ச்மேன் வீட்டில் 8.5 பவுன் திருட்டு
/
வாட்ச்மேன் வீட்டில் 8.5 பவுன் திருட்டு
ADDED : ஜூலை 27, 2024 01:14 AM
ஈரோடு: ஈரோட்டில் வாட்ச்மேன் வீட்டில் பூட்டை உடைத்து நகை திரு-டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஈரோடு, வெண்டிபாளையம் பேரேஜ் செல்லும் சாலையில் நடேசன் - ராணி தம்பதியினர் வசிக்கின்றனர்.
நடேசன், தனியார் நிறுவன வாட்ச்மேன். ராணி, பேக்கரியில் வேலை செய்து வரு-கிறார்.மகள்களுக்கு திருமணமாகி சென்றுவிட்டதால், இருவர் மட்டும் வசிக்கின்றனர். நேற்று காலை வழக்கம்போல் இருவரும் வேலைக்கு சென்றுவிட்டனர். இந்நிலையில் வீட்டின் கதவு திறந்து கிடப்பதாக, பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் மாலையில் தகவல் தெரிவித்தனர்.வீட்டுக்கு வந்து பார்த்தபோது, பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. பீரோவில் வைத்திருந்த, எட்டரை பவுன் நகை திருட்டு போனது தெரிந்தது. புகாரின்படி மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

