ADDED : டிச 07, 2025 09:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புன்செய்புளியம்பட்டி: பவானிசாகர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்தவர் செல்வன், 24; பெயிண்டரான இவரது மனைவி திரிஷா, 21; நிறைமாத கர்ப்பிணியாக இருந்தவருக்கு நேற்று திடீரென வலி ஏற்பட்டது. 108 அவசர கால ஆம்புலன்கை வரவழைத்து, சத்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.
எரங்காட்டூர் அருகே செல்லும் வழியிலேயே பிரசவ அறிகுறி தெரிந்ததால், டிரைவர் சனாவுல்லா வாகனத்தை ஓரம் கட்டி நிறுத்தினர். திரிஷாவுக்கு செவிலியர் ரஷீலா பிரசவம்
பார்த்தார். இதில் பெண் குழந்தை பிறந்தது. இதை தொடர்ந்து சத்தி அரசு மருத்துவமனையில் தாய், சேயை அனுமதித்தனர்.

