ADDED : ஜூலை 05, 2026 09:40 PM
அ நிறம் | அளவு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி, சின்னசேலம் பகுதியில் மதுபாட்டில் விற்ற பெண் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் பிரித்தா மற்றும் போலீசார் நேற்று முன்தினம் காலை ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் மனைவி ராணி, 60; தனது பூக்கடையில் மதுபாட்டில் விற்றது தெரியவந்தது. உடன் அவரை கைது செய்து, 10 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
அதேபோல் சின்னசேலம் இன்ஸ்பெக்டர் நந்தகோபால் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் காலை ரயில் நிலையம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு மதுபாட்டில் விற்ற வாணாபுரம் அடுத்த யால் கிராமத்தைச் சேர்ந்த பாபு மகன் அய்யப்பன், 29; தொண்டனந்தல் கபிரேல், 57; ஆகியோரை கைது செய்தனர்.
