ADDED : ஜூலை 26, 2024 11:13 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் பூட்டை கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு பால், தயிர், இளநீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது.
பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து வழிபட்டனர்.
சங்கராபுரம் திரவுபதி அம்மன், பாண்டலம் துர்க்கை அம்மன்,முதல்பாலமேடு புற்று மாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

