/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மூதாட்டியிடம் நுாதன முறையில் 5 சவரன் நகைகள் அபேஸ்
/
மூதாட்டியிடம் நுாதன முறையில் 5 சவரன் நகைகள் அபேஸ்
ADDED : ஏப் 26, 2024 11:32 PM
உளுந்தூர்பேட்டை : ஓட்டுபோட்டதற்கு பணம் வந்திருப்பதாக கூறி,மூதாட்டியிடம் 5 சவரன் நகையை அபேஸ் செய்த ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் தாலுகா, புலியூர் பகுதியைச் சேர்ந்தவர் சிங்காரவேல். இவரது மனைவி தமிழரசி,60; இவர் நேற்று மாலை 5.30 மணியளவில் விருத்தாசலம் செல்வதற்காக உளுந்தூர்பேட்டை பஸ் நிலையத்தில் பஸ்சிற்காக காத்திருந்தார்.
அப்போது அங்கு வந்த 45 வயது மதிக்கத்தக்க ஒருவர், தேர்தலில் ஓட்டு போட்டதற்காக ரூ.1,500 உங்களுக்கும், உங்களது கணவருக்கும் பணம் வந்துள்ளது. அந்த பணத்தை வாங்கித் தருகிறேன். அதற்கு உங்களது போட்டோ, வாக்காளர் அடையாள அட்டை ஜெராக்ஸ் கொடுங்கள் என கேட்டுள்ளார்.
இதனால் தமிழரசி, போட்டோ எடுக்க வேண்டும், ஜெராக்ஸ் இல்லை போட வேண்டும் எனக் கூறியுள்ளார். இதனால் அந்த ஆசாமி, அருகில் உள்ள கடைக்கு போகலாம் என்று கூறியுள்ளார்.
அப்போது அந்த ஆசாமி கழுத்தில் நகை போட்டிருந்தா்ல் பணம் கிடைக்காதுஎன்று கூறி, நகைகளை கழற்றி பையில் வைத்து கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.
இதனால் மூதாட்டி அணிந்திருந்த 5 சவரன் நகையை கழற்றி பையில் வைத்துக்கொண்டு, ஜெராக்ஸ் கடைக்கு சென்ற போது, அந்த ஆசாமி, மூதாட்டியிடம் நகை பையை தன்னிடம் கொடுக்குமாறு கூறியதை தொடர்ந்து மூதாட்டி அவரிடம் நகை பையை கொடுத்தார்.
இந்த சமயத்தில் மூதாட்டி ஜெராக்ஸ் கடைக்கு சென்று திரும்பி பார்த்த போது, நகையை வாங்கிய ஆசாமி மாயமனார். இதனால் மூதாட்டி சத்தம் போட்டு கத்தியும், அந்த ஆசாமி அங்கிருந்த தப்பியோடிவிட்டார்.
சம்பவம் குறித்து மூதாட்டி கொடுத்த புகாரின் பேரில்,உளுந்துார்பேட்டை போலீசார் நகையுடன் மாயமான ஆசாமியை வலை வீசி தேடி வருகின்றனர்.

