/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிேஷகம்
/
அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிேஷகம்
ADDED : ஏப் 26, 2024 11:27 PM

ரிஷிவந்தியம் : மேலத்தேனுாரில் உள்ள ஸ்ரீவரம் தரும் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிேஷகம் நேற்று நடந்தது.
ரிஷிவந்தியம் அடுத்த மேலத்தேனுாரில் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீவரம் தரும் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இங்கு பாலகணபதி, பாலமுருகன், எல்லைக் காளி, வராகி அம்மன், சப்தகன்னிமார், துர்க்கை, வைஷ்ணவி, பிராமி, பாவாடைராயன் மற்றும் நவகிரகங்கள் உள்ளிட்ட சுவாமிகள் உள்ளன.
இக்கோவில் கும்பாபிேஷக விழா கடந்த 25ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து, முதல்கால யாகசாலை பூஜை உள்ளிட்ட நிகழ்ச்சிகளும், 26ம் தேதி கோ பூஜை, இரண்டாம் கால யாகசாலை பூஜை உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடந்தது.
தொடர்ந்து, நேற்று காலை 10 மணியளவில் கோவில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. பல்வேறு கிராமங்களை சேர்ந்த நுாற்றுக்கணக்கான மக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிேஷகத்திற்கான ஏற்பாடுகளை ஊர்பொதுமக்கள், கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

