/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
குழந்தைகள் நல திட்ட மருத்துவ முகாம்
/
குழந்தைகள் நல திட்ட மருத்துவ முகாம்
ADDED : ஜூலை 26, 2024 04:41 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேசிய குழந்தைகள் மற்றும் சிறார் நல திட்டம் சார்பில் மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது.
கள்ளக்குறிச்சி தேசிய குழந்தைகள் மற்றும் சிறார் நல திட்டம் மருத்துவர் ஜெனிபர் ராகுல் தலைமையிலான மருத்துவக்குழுவினர் கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு முழுமையான மருத்துவ பரிசோதனைகளை செய்தனர். முழு உடல் குறைபாடுகள் ஏதேனும் இருப்பின் அதனை சிறுவயதிலேயே கண்டறிந்து நீக்கிடும் வகையில் நடந்த முகாமில் டாக்டர் ரஹ்மான், செவிலியர்கள் அம்பிகேஸ்வரி, சாந்தி ஆகியோர் மருத்துவ பணிகளை மேற்கொண்டனர். முகாமில் கலந்துகொண்ட 275 மாணவர்களில் 30 பேர்களுக்கு சிறு உடல் உபாதைகள் இருப்பது கண்டறியப்பட்டு, அவர்கள் அனைவரும் மேல் சிகிச்சைக்காக அரசு மாவட்ட மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.

