sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி சேர்க்கைக்கு கூடுதல் கால அவகாசம்

/

கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி சேர்க்கைக்கு கூடுதல் கால அவகாசம்

கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி சேர்க்கைக்கு கூடுதல் கால அவகாசம்

கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி சேர்க்கைக்கு கூடுதல் கால அவகாசம்


ADDED : ஜூலை 26, 2024 04:46 AM

Google News

ADDED : ஜூலை 26, 2024 04:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி சேர்க்கைக்கு கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் முருகேசன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: விழுப்புரம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், 2024-25ம் கல்வியாண்டிற்கான முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இப்பயிற்சியில் சேர, கடந்த 19ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்ட நிலையில், கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சியில் சேர விரும்புபவர்கள் வரும் 31ம் தேதி வரை www.tncu.tn.gov.in என்ற இணையதளத்தில், ரூ.100 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.

10, பிளஸ் 2, கல்லுாரி படிப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பயிற்சியில் சேரலாம். ஒரு வருட கால பயிற்சி, 2 பருவங்களாக நடைபெறும். ஆன்லைனில் சமர்ப்பித்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அத்துடன் அசல் மற்றும் நகல் கல்விச்சான்றுகளை இணைத்து மேலாண்மை நிலையத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். பயிற்சி கட்டணமாக ரூ.18,750 செலுத்த வேண்டும். மேலும் விபரங்களை எண்.2/1006, எல்லீஸ் சத்திரம் சாலை, வழுதரெட்டி, விழுப்புரம் - 605 401 என்ற முகவரியில் செயல்பட்டு வரும் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தை நேரிலும், 04146-259467, 94425 63330 ஆகிய எண்ணிலும் தொடர்பு கொண்டு கேட்டறியலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us