/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மணலுார்பேட்டையில் மயானக் கொள்ளை
/
மணலுார்பேட்டையில் மயானக் கொள்ளை
ADDED : பிப் 28, 2025 05:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார்: மணலுார்பேட்டை, அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் மாசி பெரு விழா நேற்று முன்தினம் துவங்கியது.
இதையொட்டி விநாயகர் பூஜை மற்றும் கொடியேற்றப்பட்டு, தென்பெண்ணை ஆற்றில் இருந்து சக்தி அழைத்து வரப்பட்டு காப்பு கட்டுதல் நடந்தது.
நேற்று காலை பத்ரகாளி அலங்காரத்துடன் பூதவாகனத்தில் கரகாட்டம், சிலம்பாட்டத்துடன் ஊரின் முக்கிய வீதிகள் வழியாக அம்மன் ஊர்வலம் நடந்தது.
தொடர்ந்து மாலை தென்பெண்ணை ஆற்றில் மயானக் கொள்ளை நடந்தது.
ஏராளமானோர் அம்மனை வழிபட்டனர்.

