தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ அரகண்டநல்லுார் கமிட்டியில் நெல் வரத்து அதிகரிப்பு

அரகண்டநல்லுார் கமிட்டியில் நெல் வரத்து அதிகரிப்பு

அரகண்டநல்லுார் கமிட்டியில் நெல் வரத்து அதிகரிப்பு


ADDED : ஜூலை 06, 2026 06:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 06, 2026 06:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருக்கோவிலுார்: அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டிக்கு மக்காச்சோளத்தின் வரத்து குறைந்தாலும், நெல் வரத்து அதிகரித்துள்ளது.

ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டிக்கு விவசாயிகள் அதிக விளை பொருட்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

தற்போது மக்காச்சோளத்தின் அறுவடை சீசன் நிறைவடைந்திருக்கும் சூழலில், நெல் வரத்து அதிகரித்துள்ளது.

நேற்று நெல் 2720 மூட்டைகள், எள் 120, வேர்க்கடலை 75, மக்காச்சோளம் 170 மூட்டை என 245 மெட்ரிக் டன் விளை பொருட்கள் கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் நேற்று ஒரே நாளில் 74.17 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகமானது.

வேர்க்கடலை அறுவடை துவங்கியிருப்பதால் வரும் நாட்களில் அதன் வரத்து அதிகரிக்க கூடும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us