/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
நரிக்குறவர் இன மக்களுக்கு போலீசார் விழிப்புணர்வு
/
நரிக்குறவர் இன மக்களுக்கு போலீசார் விழிப்புணர்வு
ADDED : ஜூலை 26, 2024 11:14 PM

கள்ளக்குறிச்சி: நீலமங்கலம் நரிக்குறவர் இன மக்களுக்கு காவல் துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் நரிக்குறவர் பகுதியில் 70க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது.
இந்நிலையில் கள்ளக்குறிச்சி காவல் நிலையம் சார்பில் நேற்று நரிக்குறவர் காலனி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு இன்ஸ்பெக்டர் ராபின்சன் தலைமை தாங்கி பேசினார். அதில் நாட்டு துப்பாக்கிகளை வைத்து வன விலங்குகளை வேட்டையாடும் குற்ற செயல்களில் ஈடுபட கூடாது. அதேபோல் கள்ளத்தனமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்ய கூடாது போன்ற பல்வேறு குற்ற சம்பவங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுத்தினர்.
மேலும், நரிக்குறவ இன மக்களின் வாழ்வாதாரத்திற்கு உள்ள மாற்று வழிகள் குறித்தும் எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் சப் இன்ஸ்பெக்டர்கள் கனகவல்லி, விஜயராகவன் மற்றும் போலீசார் பலர் பங்கேற்றனர்.

