திருக்கோவிலுார் பள்ளி விளையாட்டு மைதான சுற்றுச்சுவர் சீரமைக்கப்படுமா?
திருக்கோவிலுார் பள்ளி விளையாட்டு மைதான சுற்றுச்சுவர் சீரமைக்கப்படுமா?
ADDED : ஜூலை 08, 2026 07:41 PM

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அரசு பள்ளி விளையாட்டு மைதானத்தின் சுற்றுச் சுவர் இடிந்து விழும் நிலையில் இருப்பதால் மாணவர்கள் அச்சத்துடன் விளையாடி வருகின்றனர்.
திருக்கோவிலுார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரே விளையாட்டு மைதானம் உள்ளது. இது ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களும் பயன்படுதுகின்றனர். காலை மாலை நேரத்தில் பொதுமக்கள் நடை பயிற்சியும் மேற்கொள்கின்றனர்.
திருக்கோவிலுாரில் இருக்கும் ஒரே விளையாட்டு மைதானம் இது என்பதால் மாணவர்கள், பொதுமக்கள் இதனை எல்லா நேரங்களிலும் பயன்படுத்துகின்றனர். மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த விளையாட்டு மைதானத்தின் சுற்றுச்சுவரின் தெற்கு பகுதியில் வீடு மற்றும் திருமண மண்டபத்தை ஒட்டி இருக்கும் மதில் சுவர் விரிசல் விழுந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் மைதானத்தை பயன்படுத்தும் பொதுமக்களும், மாணவர்களும் மிகுந்த அச்சத்துடனே பயிற்சியை தொடர்கின்றனர்.
விபத்து ஏற்படுவதற்கு முன்பாக கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுத்து மைதானத்தின் சுற்றுச்சுவரை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
