/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சியில் ஒரு நாளைக்கு 1.04 லட்சம் மகளிர் கட்டணமில்லா பயணம் கலெக்டர் தகவல்

ADDED : டிச 07, 2025 05:54 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கடந்த நான்கரை ஆண்டுகளில் 11.49 கோடி முறை மகளிர் கட்டணமில்லாமல் அரசு பஸ்களில் பயணம் செய்துள்ளனர்.
இது குறித்து கலெக்டர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;
அரசு நகர பஸ்களில் பெண்களுக்கு கட்டணமில்லா பயணத் திட்டத்தை 2021ம் ஆண்டு ஜூன் மாதம் தமிழக முதல்வர் அறிமுகப்படுத்தினார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இத்திட்டத்தின்கீழ் ஒரு நாளைக்கு, 1.04 லட்சம் மகளிர் பயணம் செய்கின்றனர். அதன்படி கடந்த நான்கரை ஆண்டுகளில் மட்டும் அரசு நகர பஸ்களில், 11.49 கோடி முறை மகளிர் கட்டணமில்லா பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்த பயணத் திட்டம் ஏழை எளிய மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.