/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வாக்காளர் பட்டியல் திருத்த பணி: கலெக்டர் நேரில் ஆய்வு
/
வாக்காளர் பட்டியல் திருத்த பணி: கலெக்டர் நேரில் ஆய்வு
வாக்காளர் பட்டியல் திருத்த பணி: கலெக்டர் நேரில் ஆய்வு
வாக்காளர் பட்டியல் திருத்த பணி: கலெக்டர் நேரில் ஆய்வு
ADDED : நவ 14, 2025 11:13 PM

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் தொகுதியில் நடக்கும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை விழுப்புரம் கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான் நேரில் ஆய்வு செய்தார்.
விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலுார் தொகுதியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடந்து வருகிறது.
இப்பணிகளை விழுப்புரம் கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான் நேரில் ஆய்வு செய்து, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த படிவங்கள் முறையாக வழங்கி பதிவு செய்யப்படுகிறதா என வாக்காளர்களிடமும், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடமும் கேட்டறிந்தார். பணியை தேர்தல் ஆணைய நெறிமுறைகளுக்கு உட்பட்டு விரைவாக செய்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின்போது திருக்கோவிலுார் சப்கலெக்டர் ஆனந்த் குமார் சிங், நகராட்சி ஆணையர் திவ்யா உள்ளிட்ட வருவாய் துறை அலுவலர்கள் இருந்தனர்.