/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ராமகிருஷ்ணா வித்யாமந்திர் பள்ளியில் 'தினமலர் - பட்டம்' வினாடி- வினா போட்டி

ADDED : டிச 07, 2025 06:08 AM

கள்ளக்குறிச்சி: உளுந்துார்பேட்டை ராமகிருஷ்ணா வித்யாமந்திர் பள்ளியில், தினமலர் பட்டம் இதழ் சார்பில் நடந்த வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
புதுச்சேரி தினமலர் பட்டம் இதழ், ஆச்சாரியார் கல்வி குழுமம் சார்பில், உளுந்துார்பேட்டை ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்யாமந்திர் சி.பி.எஸ்.இ., பள்ளியில், பதில் சொல் பரிசு வெல் என்ற மெகா வினாடி - வினா போட்டியின் தகுதி சுற்று போட்டி நடந்தது. இதில், 250க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். அதிக மதிப்பெண் பெற்ற 16 மாணவ, மாணவிகளை தேர்வு செய்து 8 குழுக்களாக பிரிக்கப்பட்டு 2ம் கட்ட தகுதி சுற்று நடந்தது.
இப்போட்டியில் 8ம் வகுப்பு மாணவிகள் யாழினி பிரியா, லித்திகா ஆகியோர் முதலிடமும், 9ம் வகுப்பு மாணவர்கள் அகிலன், சண்முகராஜன் ஆகியோர் இரண்டாம் இடமும் பிடித்து வெற்றி பெற்றனர். பள்ளி முதல்வர் கலைவாணி, பள்ளியின் அலுவலக நிர்வாகி லோகேஸ்வரி தலைமை தாங்கி போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ், கேடயம் வழங்கி பாராட்டினார். போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பள்ளி அளவில் வெற்றி பெற்ற இரு அணிகளும் மெகா வினாடி- வினா போட்டியில் பங்கேற்க தேர்வாகினர்.