ADDED : ஜூலை 03, 2026 04:02 AM
கள்ளக்குறிச்சி: முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் 29,762 வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப் படுகிறது.
இது குறித்து கலெக்டர் பத்மஜா விடுத்துள்ள செய்திகுறிப்பு;
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 70 வயதிற்கு மேற்பட்ட வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்கள் நியாயவிலை கடைகளுக்கு நேரில் சென்று பொருட்களை பெற்று செல்வதில் இடர்பாடுகள் ஏற்படுகிறது.
இதனை களைய அனைத்து நியாயவிலை கடைகளில் இணைக்கப்பட்டுள்ள 29,762 தகுதி வாய்ந்த வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி ரேஷன் கார்டுதாரர்களுக்கு வரும் 4ம் தேதி மற்றும் 6ம் தேதி வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்பட உள்ளது.
