/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மத போதகம் புகாரை தொடர்ந்து அரசு பள்ளி ஆசிரியை இடமாற்றம்
/
மத போதகம் புகாரை தொடர்ந்து அரசு பள்ளி ஆசிரியை இடமாற்றம்
மத போதகம் புகாரை தொடர்ந்து அரசு பள்ளி ஆசிரியை இடமாற்றம்
மத போதகம் புகாரை தொடர்ந்து அரசு பள்ளி ஆசிரியை இடமாற்றம்
ADDED : ஜூலை 25, 2025 02:26 AM
கள்ளக்குறிச்சி: பிள்ளையார்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மத போதகம் செய்ததாக ஆசிரியை மீது பொதுமக்கள் கொடுத்த புகாரையடுத்து, அவர் வேறு பள்ளிக்கு மாற்றம் செய்து வட்டார கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
திருக்கோவிலுார் அடுத்த பிள்ளையார்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அறிவியல் பாட ஆசிரியையாக பணிபுரிபவர் ஹெப்சிபா. இவர் சில ஆண்டுகளாக பள்ளியில் மாணவர்களிடம் மத போதகம் செய்து வந்துள்ளார்.
இதுகுறித்து அப்பகுதியினர் சி.இ.ஓ., கார்த்திகாவிடம் புகார் மனு அளித்தனர்.
தொடர்ந்து தனி அதிகாரி மூலம் பள்ளியில் ஆசிரியையின் மதபோதகம் குறித்த விசாரணை நடத்தி, உண்மையெனில் அவர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ஆசிரியை ஹெப்சிபாவை, சாங்கியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு இடமாற்றம் செய்து திருக்கோவிலுார் வட்டார கல்வி அலுவலர் வேணுகோபால் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

