/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சின்ன கொள்ளியூர் தொடக்கப்பள்ளி சிறந்த பள்ளியாக அரசு தேர்வு
/
சின்ன கொள்ளியூர் தொடக்கப்பள்ளி சிறந்த பள்ளியாக அரசு தேர்வு
சின்ன கொள்ளியூர் தொடக்கப்பள்ளி சிறந்த பள்ளியாக அரசு தேர்வு
சின்ன கொள்ளியூர் தொடக்கப்பள்ளி சிறந்த பள்ளியாக அரசு தேர்வு
ADDED : பிப் 21, 2025 05:02 AM

ரிஷிவந்தியம்: சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்ட சின்ன கொள்ளியூர் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.
முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இதையொட்டி, விழிப்புணர்வு ஏற்படுத்தி மாணவர் சேர்க்கை அதிகரித்தல், மாணவர் வருகை சதவீதம், வளாகம் மற்றும் கழிவறையை துாய்மையாக பராமரித்தல்.
கற்றல் மற்றும் கற்பித்தல் உபகரணங்களை பயன்படுத்தி பாடம் நடத்துதல் ஆகியவற்றை சிறப்பாக மேற்கொள்ளும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக்கு, சிறப்பு பரிசளிப்பு திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது.
மேலும், மாவட்டம் தோறும் சிறந்த பள்ளிகளை தேர்வு செய்ய அந்தந்த கலெக்டர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2024-25ம் கல்வியாண்டிற்கான சிறந்த பள்ளியாக, வாணாபுரம் அடுத்த சின்ன கொள்ளியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தேர்வு செய்யப்பட்டு, 25 ஆயிரம் ரூபாய் அரசு நிதி ஒதுக்கீடு செய்தது.
ரிஷிவந்தியம் வட்டார கல்வி அலுவலர்கள் பழனிமுத்து, மோகன் சவுந்தர்ராஜன் ஆகியோர் பள்ளி தலைமை ஆசிரியர் பழனிசாமியிடம் பாராட்டு சான்றிதழ் மற்றும் 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினர்.

