/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்குள் நெட்வொர்க்... பிரச்னை; மணவர்கள், டாக்டர்கள் , நோயாளிகள், பொதுமக்கள் அவதி
/
அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்குள் நெட்வொர்க்... பிரச்னை; மணவர்கள், டாக்டர்கள் , நோயாளிகள், பொதுமக்கள் அவதி
அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்குள் நெட்வொர்க்... பிரச்னை; மணவர்கள், டாக்டர்கள் , நோயாளிகள், பொதுமக்கள் அவதி
அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்குள் நெட்வொர்க்... பிரச்னை; மணவர்கள், டாக்டர்கள் , நோயாளிகள், பொதுமக்கள் அவதி
ADDED : டிச 01, 2025 06:03 AM

கள்ளக்குறிச்சி: சிறுவங்கூரில் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை மற்றும் விடுதி கட்டடங்களில் 'மொபைல் போன் நெட்வொர்க்' பிரச்னையால் மருத்துவர்கள், மாணவ மாணவிகள், நோயாளிகள் மற்றும் உறவினர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கள்ளக்குறிச்சி அடுத்த சிறுவங்கூரில் அரசு மருத்துவ கல்லுாரி, மருத்துவமனை கடந்த 3 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் சிகிச்சைக்காக நாள்தோறும் வந்து செல்கின்றனர்.
ஒவ்வொருக்கும் மொபைல் போன் தற்போது மிகவும் அத்தியாவசியமாக இருக்கிறது. மருத்துவ கல்லுாரி மருத்துவமனை மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் குடியிருப்பு, கல்லுாரி மாணவர்கள் விடுதி கட்டடங்களில் 'மொபைலுக்கான நெட்வொர்க் முற்றிலும் கிடைப்பதில்லை.
இதனால் மருத்துவமனைக்கு சிகிச்சை வரும் நோயாளிகள், உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படும் நிலையில், அவசர நேரங்களில் வெளியே அவர்களது உறவினர்களை தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சில நேரங்களில் மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்கு மருத்துவர்களும் ஒருவரையொருவர் தொடர்பு கொள்ள முடியவதில்லை. கட்டடத்தின் ஜன்னல் ஓரங்களில் சென்றால் மட்டுமே பேசமுடியும்.
அதேபோல், மருத்துவமனைக்கு எதிரே மருத்துவ பேராசிரியர்களுக்கான குடியிருப்பு மற்றும் கல்லுாரி மாணவ, மாணவிகள் தங்கும் விடுதி உள்ளது. அங்கேயும் மொபைல் நெட்வொர்க் பிரச்னையால் மருத்துவர்கள் மற்றும் கல்லுாரி மாணவ மாணவிகள் தங்களது குடும்பத்தினரை தொடர்பு கொள்வதில் கடும் சிரமங்கள் ஏற்படுகிறது.
கடந்தாண்டு மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்த 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். டாடா ஏஸ், பள்ளி வாகனங்கள், பஸ்கள் போன்ற வாகன விபத்துகள் நேரிடும் போது பலர் காயமுற்று சிகிச்சைக்காக சேர்க்கப்படுகின்றனர்.
இதுபோன்ற தருணங்களில் மருத்துவமனைக்கு செல்வோர், அங்கிருந்து வெளியே குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் உடனடியாக தொடர்பு கொள்ள முடிவதில்லை. உயர் சிகிச்சை பெற வெளியூர் செல்ல வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியதும், உடன் இருப்போர் அலறியடித்து கொண்டு தங்களது குடும்பத்தினர், உறவினர்களை உடனடியாக தொடர்பு கொள்ள முயற்சிக்கும்போது அங்கும் இங்குமாக அலைந்து திரிகின்றனர்.
தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு உதவியாக இருக்கும் உறவினர்கள் வெளியே சென்றால் அவசரத்திற்கு அவர்களை கூட தொடர்பு கொள்ள முடியாத நிலை உள்ளது. உள்ளே அவசர சிகிச்சையில் உள்ள நோயாளிகள் நிலைகள் குறித்து, உடன் இருப்போர் வெளியே வந்து தெரிவிக்கும் வரை குடும்பத்தினர், உறவினர்கள் 'திக்' 'திக்' மனநிலையிலேய உள்ளனர்.
அதேபோல் அரசுத்துறை உயர் அதிகாரிகள், மருத்துவர்களை உடனுக்குடன் தகவல்களை கேட்டறிய முடியாத நிலை ஏற்பட்டது. மருத்துவர்கள், நோயாளிகள், அவர்களுக்கு உதவியாக இருப்போர் என அனைவரும் அவ்வப்போது கட்டடத்தின் ஜன்னல் ஓரங்களில் வந்து பேசி விட்டு செல்லும் நிலைதான் காணப்படுகிறது. 'மொபைல் நெட்வொர்க்' பிரச்னைக்கு தீர்வு காண மருத்துவ கல்லுாரி மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
ஆனால், இதுவரை அதற்கான நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது.
எனவே, சிறுவங்கூரில் உள்ள அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை கட்டடத்திற்குள் தங்கு தடையின்றி மொபைல் நெட்வொர்க் கிடைக்கும் வகையில் அப்பகுதியில் பி.எஸ்.என்.எல்., நிறுவனம் சார்பில் அல்லது தனியார் நிறுவனத்தின் 'மொபைல் டவர்கள்' அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

