/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஊராட்சி துணைத் தலைவர் மீது நடவடிக்கை கோரி மனு
/
ஊராட்சி துணைத் தலைவர் மீது நடவடிக்கை கோரி மனு
ADDED : டிச 09, 2025 07:10 AM

கள்ளக்குறிச்சி: ஊராட்சியில் பணிகளுக்கு ஒப்புதல் அளிக்க மறுக்கும் ஊராட்சி துணைத் தலைவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் மனு அளிக்கப்பட்டது.
இது தொடர்பாக பிரதிவிமங்கலம் ஊராட்சி தலைவர் அமுதா தட்சணாமூர்த்தி கலெக்டர் அலுவலகத்தில் அளித்த புகார் மனு:
தியாகதுருகம் ஊராட்சி ஒன்றியம், பிரதிவிமங்கலம் ஊராட்சியில் முகமது மத்தீன் என்பவர் துணை தலைவராக உள்ளார். கடந்த ஜனவரி முதல் நவம்பர் வரை ஊராட்சி சார்பில் பொதுமக்களுக்கு செய்யப்பட்ட அத்தியாவசிய பணிகளான குடிநீர் பராமரிப்பு, தெருவிளக்கு மற்றும் 15வது நிதி குழு மானியத்தில் செய்யப்பட்ட அத்தியாவசிய பணி செய்தமைக்கான பட்டியலுக்கு அதிக கமிஷன் கேட்டு கடந்த 11 மாதங்களாக ஒப்புதல் அளிக்காமல் இருந்து வருகிறார்.
இதனால், ஊராட்சியில் தேவையான அத்தியாவசிய பணிகள் மேற்கொள்வதில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இது தொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

