/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தொகுப்பு சட்டங்களை திரும்ப பெறக்கோரி ஆர்ப்பாட்டம்
/
தொகுப்பு சட்டங்களை திரும்ப பெறக்கோரி ஆர்ப்பாட்டம்
தொகுப்பு சட்டங்களை திரும்ப பெறக்கோரி ஆர்ப்பாட்டம்
தொகுப்பு சட்டங்களை திரும்ப பெறக்கோரி ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 09, 2025 07:10 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கம்யூ., மற்றும் வி.சி., கட்சியினர் தொழிலாளர் உரிமைகளை பறிக்கும் தொகுப்பு சட்டங்களை திரும்பப்பெறக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்திற்கு மா.கம்யூ., மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர், இந்திய கம்யூ., மாவட்ட செயலாளர் ராமசாமி, வி.சி., மாவட்ட செயலாளர் அறிவுக்கரசு, பழனியம்மாள், கம்யூ., மாநிலக்குழு நிர்வாகிகள் லெனின், வாலண்டீனா, மத்திய குழு பாலசுந்தரம், வி.சி., அமைப்பு செயலாளர் இளமாறன் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில், மத்திய பா.ஜ., அரசு, 29 தொழிலாளர் நலச்சட்டங்களை 4 தொகுப்புகளாக மாற்றியதை திரும்பப்பெற வேண்டும், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். 4 சட்ட தொகுப்புகளை அமல்படுத்த மாட்டோம் என, கேரளா அரசைப்போல் தமிழக அரசும் அறிவிக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

