/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அரிசி, ஆடு வியாபாரிகள் எடுத்து சென்ற ரூ.14.88 லட்சம் பறிமுதல்
/
அரிசி, ஆடு வியாபாரிகள் எடுத்து சென்ற ரூ.14.88 லட்சம் பறிமுதல்
அரிசி, ஆடு வியாபாரிகள் எடுத்து சென்ற ரூ.14.88 லட்சம் பறிமுதல்
அரிசி, ஆடு வியாபாரிகள் எடுத்து சென்ற ரூ.14.88 லட்சம் பறிமுதல்
ADDED : மார் 19, 2024 10:44 PM

ரிஷிவந்தியம் : கள்ளக்குறிச்சி மற்றும் திருக்கோவிலுாரில் அரிசி மற்றும் ஆட்டு வியாபாரிகளிடம் இருந்து ரூ.14.88 லட்சத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ரிஷிவந்தியம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட மாடாம்பூண்டி கூட்ரோடு பகுதியில், வேளாண்மை உதவி இயக்குநர் புஷ்பராணி தலைமையிலான பறக்கும்படை குழுவினர் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அத்தியூரில் இருந்து திருக்கோவிலுார் மார்க்கமாக சென்ற லோடு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில், வாகனத்தில் இருந்த உளுந்துார்பேட்டை தாலுகா, எறையூர் கிராமத்தை சேர்ந்த அந்தோணிசாமி மகன் செவத்தான்,51; என்பவரிடம் 1 லட்சத்து 13 ஆயிரத்து 200 ரூபாய் பணமும், அவரது உறவினர் டிரைவர் அந்தோணிசாமி மகன் சின்னப்பன்,36; என்பவரிடம் 54 ஆயிரத்து 800 ரூபாய் பணமும் இருந்தது தெரிந்தது.
விசாரணையில், ஆடு வியாபாரிகளான இருவரும் 28 ஆடுகளை அத்தியூர் வாரச்சந்தையில் விற்று, அதன் மூலம் கிடைத்த பணத்தை எடுத்து சென்றதாக தெரிவித்தனர்.
ஆனாலும், உரிய ஆவணங்கள் இல்லாததால் இருவரிடமும் இருந்த ரூ.1.68 லட்சம் பணத்தை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்து, வாணாபுரம் தாசில்தார் குமரனிடம் ஒப்படைத்தனர்.
திருக்கோவிலுார்
தேவனுாரில் இருந்து நாயனுார் செல்லும் சாலையில் தேர்தல் பறக்கும் படையின் நிலையான கண்காணிப்பாளர் ஜெகநாதன் தலைமையிலான குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். வீரபாண்டியிலிருந்து தேவனுார் நோக்கி சென்ற இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் ரூ. 13.20 லட்சம் பணம் கண்டறியப்பட்டது.
வீரபாண்டியைச் சேர்ந்த குமார் மகன் கோகுல், 42; அரிசி வியாபாரியான இவர் திருக்கோவிலுார் வங்கியில் செலுத்துவதற்காக பணத்தை எடுத்து சென்றது தெரிய வந்தது.
இதற்கான உரிய ஆவணங்கள் இல்லாத காரணத்தால் பறக்கும் படையினர் திருக்கோவிலுார் கூடுதல் உதவி தேர்தல் அலுவலர் காதர்அலியிடம் ஒப்படைத்தனர். பின் விழுப்புரம் வருமானவரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

