தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வீடு மற்றும் கடைகளில் திருட்டு

 விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வீடு மற்றும் கடைகளில் திருட்டு

 விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வீடு மற்றும் கடைகளில் திருட்டு


ADDED : ஜூன் 30, 2026 11:59 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 30, 2026 11:59 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சங்கராபுரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் மற்றும் விழுப்புரம் பகுதிகளில் நகை மற்றும் பணம் திருடு போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சங்கராபுரம் அடுத்த ஊராங்காணி கிராமத்தைச் சேர்ந்தவர் தயாளன். வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். வீட்டில் இவரது மனைவி தர்ஷனி வசித்து வந்தார். கடந்த 28ம் தேதி, சங்கராபுரம் அடுத்த பூட்டை கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு தர்ஷினி சென்றார்.

நேற்று முன்தினம் வீடு திரும்பியபோது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 5.5 சரவன் நகை, 250 கிராம் வெள்ளி, 30 ஆயிரம் ரூபாய் திருடு போனது தெரியவந்தது.

இதேபோன்று, விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த கருவம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மனைவி கனகா, 35; தனியார் நிறுவனத்தில் பணி புரிகின்றனர். இருவரும் கடந்த ஏப்ரல் 23ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு, சென்னையில் கம்பெனியில் பணிபுரிய வீட்டை பூட்டிவிட்டு சாவியை எதிர் வீட்டில் கொடுத்துச் சென்றனர்.

நேற்று முன்தினம் வீட்டிற்கு வந்த கனகா, உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் வைத்திருந்த 3 சவரன் ஆரம் நகை திருடு போனது தெரியவந்தது.

மளிகை கடையில் திருட்டு விழுப்புரம் அடுத்த ராகவன்பேட்டையைச் சேர்ந்தவர் ராஜ்குமார் மனைவி திவ்யா, 32; கம்பன் நகர் பஸ் நிறுத்தத்தில் மளிகைக் கடை வைத்துள்ளார். இவர், நேற்று காலை 6:00 மணிக்கு கடையை திறக்க வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே கல்லா பெட்டியில் இருந்த 5000 ரூபாய் மற்றும் ஒரு மொபைல் போன், 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சிகரெட் பெட்டிகள் திருடு போனது தெரியவந்தது.

இந்த திருட்டு சம்பவங்கள் குறித்து சங்கராபுரம், வெள்ளிமேடுபேட்டை, விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us