/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு உளுந்துார்பேட்டையில் வரவேற்பு
/
கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு உளுந்துார்பேட்டையில் வரவேற்பு
கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு உளுந்துார்பேட்டையில் வரவேற்பு
கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு உளுந்துார்பேட்டையில் வரவேற்பு
ADDED : மார் 17, 2024 05:43 AM
கள்ளக்குறிச்சி: உளுந்துார்பேட்டையில் நின்று சென்ற கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு பா.ஜ., உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் வரவேற்பு அளித்தனர்.
உளுந்துார்பேட்டையில் ரயில் நிலையத்தில் விரைவு ரயில்கள் நின்று செல்வதில்லை. விரைவு ரயில்கள் நின்று செல்ல வேண்டும் என பல தரப்பினரும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.
மேலும் பா.ஜ., மாநிலச் செயலாளர் அஸ்வத்தாமன் மற்றும் நிர்வாகிகள் மத்திய அமைச்சரை சந்தித்து உளுந்துார்பேட்டையில் ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர்.
அதன்பேரில் சென்னையில் இருந்து கொல்லம் செல்லும் கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயில் உளுந்துார்பேட்டையில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, சென்னையில் இருந்து கொல்லம் நோக்கிச் சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் (16101) நேற்று இரவு 8:00மணியளவில் உளுந்துார்பேட்டை ரயில் நிலையம் வந்தடைந்தது.
இதனை பா.ஜ., மாநிலச் செயலாளர் அஸ்வத்தாமன், மாவட்ட தலைவர் அருள், நிர்வாகிகள் ரயில் மீது மலர்கள் துாவி வரவேற்றனர்.
அதேபோல் கம்யூ., மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர் தலைமையிலும்,, வி.சி., மாவட்ட செயலாளர் அறிவுக்கரசு, ரோட்டரி சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் வரவேற்றனர்.

