/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சியில் 1,464 பயனாளிகளுக்கு ரூ.14.92 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி
/
கள்ளக்குறிச்சியில் 1,464 பயனாளிகளுக்கு ரூ.14.92 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி
கள்ளக்குறிச்சியில் 1,464 பயனாளிகளுக்கு ரூ.14.92 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி
கள்ளக்குறிச்சியில் 1,464 பயனாளிகளுக்கு ரூ.14.92 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி
ADDED : டிச 07, 2025 06:04 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 1,464 பயனாளிகளுக்கு, ரூ.14.92 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பள்ளியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் நலத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, பழங்குடியினர் நலத்துறை, தாட்கோ, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை, மகளிர் திட்டம், கால்நடை பராமரிப்பு துறை, மாவட்ட தொழில் மையம், வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, வேளாண் பொறியியல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மூலம் 1,464 பயனாளிகளுக்கு, 14 கோடியே 92 லட்சத்து 61 ஆயிரத்து 595 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் டி.ஆர்.ஓ., ஜீவா, சப் கலெக்டர் ஆனந்த்குமார் சிங், மகளிர் திட்ட இயக்குனர் சுந்தர்ராஜன், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) தனலட்சுமி, ஆர்.டி.ஓ., முருகன், பயிற்சி கலெக்டர் சுபதர்ஷினி, ஆதிதிராவிட நல அலுவலர் தாமரைமணாளன் உட்பட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து நடந்த நிறைந்தது மனம் நிகழ்ச்சியில், விலையில்லா தையல் இயந்திரம் பெற்ற ஒலையனுார் கிராமத்தை சேர்ந்த பயனாளி அலமேலு அரசுக்கு நன்றி தெரிவித்தார்.

