தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ செம்மண் நிலத்தில் அன்னமழகி ரக நெல்

செம்மண் நிலத்தில் அன்னமழகி ரக நெல்

செம்மண் நிலத்தில் அன்னமழகி ரக நெல்


ADDED : ஜூலை 07, 2026 03:41 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 07, 2026 03:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

செம்மண் நிலத்தில், அன்னமழகி ரக நெல் சாகுபடி குறித்து, செங்கல்பட்டு மாவட்டம், பவுஞ்சூர் ஒன்றியம், நீலமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த நீலபூ.கங்காதரன் கூறியதாவது:

செம்மண் நிலத்தில், அன்னமழகி ரக நெல் சாகுபடி செய்துள்ளேன். இது, சீதோஷ்ண நிலை பொருத்து, 110 நாளில் அறுவடைக்கு வரக்கூடிய சன்ன ரகமாகும்.

சம்பா மற்றும் நவரை பருவத்தில் நடவு மற்றும் நேரடி விதைப்பு என, ஏதேனும் ஒரு முறையில் சாகுபடி செய்யலாம். சொர்ணவாரி பருவத்திலும் சாகுபடி செய்யலாம்.

குறிப்பாக, சொர்ணவாரி பருவத்தில், வைகாசி மாதத்தில் சாகுபடி செய்யலாம். இந்த பருவத்தில் சாகுபடி செய்யும் போது, 10 நாட்கள் கழித்து அறுவடைக்கு வரும்.

ரசாயன உரங்கள் இன்றி பாரம்பரிய ரக நெல் சாகுபடி செய்யும் போது, ஒரு ஏக்கருக்கு 15 நெல் மூட்டைகள் மகசூல் கிடைத்தாலும், அதை அரிசியாக மதிப்புகூட்டி விற்பனை செய்யும் போது, நல்ல வருவாய் ஈட்ட முடியும்.

இந்த அரிசி உணவாக எடுத்துக் கொள்ளும் போது, வயிறு சம்பந்தமான பிரச்னைகள் மற்றும் குழந்தைகளுக்கு சிறந்த உணவாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புக்கு:

-நீலபூ.கங்காதரன்,

96551 56968.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us