ADDED : மார் 21, 2024 10:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் லாரி உரிமையாளர் சங்க கூட்டம், ஒலிமுகமதுபேட்டையில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு லாரி உரிமையாளர் சங்க கவுரவ தலைவர் தியாகராஜன் தலைமை வகித்தார்.
காஞ்சிபுரம் லாரி உரிமையாளர் சங்க தலைவராக மகேஷ், செயலராக வரதன், பொருளாளராக தியாகராஜன், கவுரவ தலைவராக கண்ணன் ஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
புதிய நிர்வாகிகளுக்கு, முன்னாள் நிர்வாகிகள் மற்றும் லாரி உரிமையாளர் பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

