நிழற்குடை இல்லாத பஸ் நிறுத்தம் வல்லம் பயணியர் அவதி
நிழற்குடை இல்லாத பஸ் நிறுத்தம் வல்லம் பயணியர் அவதி
ADDED : ஜூலை 02, 2026 04:50 PM

ஸ்ரீபெரும்புதுார், ஜூலை 3–
வல்லம் பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாததால், பயணியர் அவதிப்படுகின்றனர்.
ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்தில் வல்லம் ஊராட்சி அமைந்துள்ளது. இங்கு, ஸ்ரீபெரும்புதுார் –- சிங்கபெருமாள் கோவில் சாலையில், பேருந்து நிறுத்தம் உள்ளது.
இந்த பேருந்து நிறுத்தத்தின் வழியே, தாம்பரம் - ஸ்ரீபெரும்புதுார், திருவள்ளூர் - செங்கல்பட்டு உள்ளிட்ட வழித்தடத்தின் வழியே, ஏராளமான தனியார் மற்றும் அரசு பேருந்து தினமும் சென்று வருகின்றனர்.
அதே போல, வல்லம் சிப்காட் தொழிற்சாலை பணிக்கு செல்லும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் தினமும் அரசு பேருந்து வாயிலாக வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில், இந்த பேருந்து நிறுத்தத்தில் பயணியர் நிழற்குடை இல்லை. இதனால், பயணியர் வெயில், மழையில் சாலையோரம் நிற்க வேண்டிய நிலை உள்ளது.
பெண்கள், குழந்தைகள், பள்ளி, கல்லுாரி மாணவ – மாணவியர், முதியோர் மிகவும் சிரமப்படுகின்றனர்.
எனவே, இங்கு இருக்கை வசதியுடன் பயணியர் நிழற்குடை அமைக்க வேண்டும் என, பயணியர் வலியுறுத்தி வருகின்றனர்.
